கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பிரவீன் மற்றும் அவரது மனைவி மீதான சமூக வலைதளங்கள் மூலம் வந்த செய்திகள் தற்கொலைக்கு காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரவீன்நாத்தின் தற்கொலைக்கு ஆன்லைன் ஊடகங்களே காரணம் எனவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரவீனும் ரிஷானா ஐஷும் கடந்த காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பிரிந்து செல்வதாக சில நாட்களுக்கு முன் சில இணைய ஊடகங்களில் செய்தி பரவியது.
இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பீரவீன் இந்த முடிவை எடுத்தார் என தெரிகிறது.
இதனிடையிடல் பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானாவும் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.