வெடுக்குநாறி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுகின்றன.
இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது எமக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகள் தமக்கான வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலய விவகாரத்திலும் இவ்வாறே இடம்பெற்றது. அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகக் குறிப்பிட்டனர்.
இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருக்க வேண்டுமெனில் அரசியல்வாதிகள் அனைவரையும் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நீக்க வேண்டும்.
எம்மை இனவாதிகளென கூறுபவர்கள் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை.
இவ்வாறான மத விவகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனில் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தலாம். ஆனால் அனைவரும் மூத்தோர் என்ற அடிப்படையில் எம்மால் ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியுமல்லவா?
அரசியல்வாதிகளிடம் ஒழுக்கம்
இந்நாட்டில் ஒழுக்கம் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகளிடத்தில் ஒழுக்கம் இல்லை. அரசியல்வாதிகளிடம் ஒழுக்கமும், சகிப்புத்தன்மையும் செல்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளும் அங்கு செல்கின்றன. வாக்குகளுக்காக அனைவரும் இவ்வாறு செயற்படுகின்றனர்.