Home விளையாட்டு மதிஷா பத்திரன சில காலம் விளையாடக் கூடாது

மதிஷா பத்திரன சில காலம் விளையாடக் கூடாது

by Jey

இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரன சில காலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது என சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி குறிப்பிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரன சில காலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது என தனிப்பட்ட முறையில் தான் நினைப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.

திஷா பத்திரன மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் சூப்பர் வீரராக திஷா பத்திரன திகழ்வார் எனவும் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 18வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த போட்டியில் மதிஷா பத்திரன நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

related posts