தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில் காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை, பிரத்யேக தொலைபேசி செயலி ஊடக கண்காணிக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது
தமிழகத்தில் 1,545 அரச பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு 33.56 கோடியில் செயல்படுத்தப்பட்டது.
அதற்கமைய, காலையில் உப்புமா,கிச்சடி உள்ளிட்ட சிற்றுண்டிகள்,குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. ”
இதன் மூலம் ஒரு லட்சத்து 14,095 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதையடுத்து, அந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள 30,122அரசு தொடக்க, நடுநிலைப் பாடசாலைகளில், பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது.