தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் திடீரென அந்த தங்க சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மெலும் தெரியவருவதாவது,
தீ, சுரங்கம் முழுவதும் பரவிதால் அங்கிருந்து தொழிலாளர்களால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை எனவும் தங்க சுரங்கம் இயங்கி வரும் இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்திலேயே தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை பார்த்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும்,விண்ணை முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அனைத்தனர். இந்த தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
மேலும், உடல் கருகிய நிலையில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த தங்கசுரங்கம் கடந்த 23 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்த பகுதியில் உள்ள பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.