நாக்பூரில் இருந்து மும்பைக்கு பறந்த விமானத்தில் அண்மையில் நடந்த இச்சம்பவத்தில் பெண்ணின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை.
AI 630 ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை அங்கிருந்த தேள் கொட்டி கடித்துள்ளது.பதறிப்போன பெண்ணுக்கு வலி ஏற்பட்ட நிலையில் இது குறித்து ஊழியர்களிடம் தகவல் சொன்னார். உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவக்குழு முதலுதவி செய்தது.
குறைந்த நேரம் பயணம் என்பதால் விமான அதிகாரிகள் மும்பையில் தரையிறங்கும் வரை காத்திருந்து உடனடியாக பெண்ணை விமான நிலையத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையில் நெறிமுறையைப் பின்பற்றி விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து தேள் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது