தன்னுடைய இளமையான காலத்தில் நிதி பற்றாக்குறையால் தான் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டதாக உலக பணக்கார்ரகளில் ஒருவரான எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க்குக்கு சொந்தமாக ஆப்ரிக்காவில் மரகதச் சுரங்கம் இருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் இணையத்தில் கதைகள் உலாவருகின்றன.
இது குறித்து டுவிட்டர் பயணாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், பரம்பரை சொத்து என எதுவும் தனக்கு கிடைக்கவில்லை எனவும், வியாபாரத்தில் நஷ்டமடைந்த தனது தந்தைக்கு 25 ஆண்டுகளாகத் பண உதவி செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இயற்பியல், பொறியியல் ஆகியவற்றின் அடிப்படைகளை தனது தந்தை தனக்கு கற்பித்ததை மிகப்பெரிய சொத்தாக கருதுவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.