Home விளையாட்டு கொல்கத்தா அணியின் வெற்றி

கொல்கத்தா அணியின் வெற்றி

by Jey

ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் இறுதிக்கட்டத்தில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அப்போது ஆண்ட்ரூ ரசல் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஒரு பந்தில் ஒரு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ரிங்கு சிங் பேட்டிங் ஆடிய நிலையில் அவருக்கு அர்ஷ்தீப் சிங் பந்துவீசினார்.

அந்த பந்தை அபாரமாக பவுண்டரிக்கு விளாசினார் ரிங்கு சிங்.

இதனால் கொல்கத்தா அணி த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியை மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான கொல்கத்தா ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு கொண்டாடினார்கள்.

related posts