இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் இந்து கடவுளை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரையடுத்து விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.