Home இந்தியா அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐதராபாத் பெண் பொறியாளர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐதராபாத் பெண் பொறியாளர் பலி

by Jey

அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாடசாலைகள், கேளிக்கை விடுதிகள் என பல இடங்களில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

33 வயதான மவுரிஹொ ஹர்சியா என்ற நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய ஹர்சியாவை சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 8 பேரில் ஒருவர் இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சரோர்நகர் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐஸ்வர்யா தடிகொண்டா என்பவர் டெக்சாசில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

ஐஸ்வர்யா தனது ஆண் நண்பருடன் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றபோது அங்கு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐஸ்வர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் குறித்த சம்பவத்தில் ஐஸ்வர்யாவின் ஆண் நண்பரும் படுகாயமடைந்தார்.

இச்சமவத்தில் உயிரிழந்த ஐஸ்வர்யா உடலை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என அவரது பெற்றோர் அரசாங்கத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

related posts