ஒன்றாரியோவில் தனியார் சிகிச்சை நிலையங்களில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பில்60 என்ற இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
மாகாணத்தில் நிலவி வரும் நீண்ட சத்திர சிகிச்சை காத்திருப்பு பட்டியல் நிலைக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நோயைக் கண்டறிந்ததன் பின்னர் நீண்ட நாட்கள் காத்திருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் முறையை மாற்றியமைப்பதே தமது நோக்கம் என மாகாண சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.