கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
கனடாவில் சேவையாற்றி வந்த சீன ராஜதந்திரியான ஸாவோ வெய் என்பவரை நாடு கடத்தப்பட உள்ளார்.
நாட்டின் சட்ட த்திற்கு புறம்பானவர் என அடையாளப்படுத்தப்பட்டு அவர் நாடு கடத்தப்பட உள்ளார்.
கனடாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்தார் எனவும் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் சோங் என்பவரை அச்சுறுத்தியதாகவும் வெய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வெய் நாடு கடத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனாவிற்கான கனடிய ராஜதந்திரி ஒருவரும் இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார்.
சங்காய்க்கான கன்சோல் அதிகாரி ஜெனிபர் லைனை நாடு கடத்துவதாக சீனா அறிவித்துள்ளது.