அண்மையில் நடைபெற்றது பிரித்தானிய மன்னர் சார்லஸுடைய முடிசூட்டு விழா.
இந்த நிகழ்வின் போது அழகிய நீல நிற ஆடையில், கம்பீரமாக கையில் வாளை ஏந்தியபடி அழகிய பெண்ணொருவர் மன்னருக்கு முன் நடைபயின்றார்.
அவர் யார் என்பது சமூகவலைதளத்தில் விவாதமான நிலையில் தற்போது முழுமையான தகவல் வெளியாகியுள்ளது.
அப்பெண்ணின் பெயர் பென்னி மோர்டான்ட், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையின் தலைவரான அவர் Lord President of the Council என்ற பொறுப்பில் உள்ளார்.
இந்த பொறுப்பில் உள்ள முதல் பெண்மணி பென்னி ஆவார்.
பென்னி, மன்னருக்கு முன் வாளேந்தி நடைபயின்றதை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.
சமூகவலைதளத்தில் அவரின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு கவனம் ஈர்த்துள்ளார்.