சூடானில் பதற்றத்தை தணிக்க ஐ.நா நடவடிக்கை எடுத்து வருவதுடன் ஏனைய நாட்டு மக்களும் தற்போது தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சூடானில் உள்நாட்டு மோதலில் பலி எண்ணிக்கை 604ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மேலும் சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவம் மோதல் நீடித்து வருகிறது.
இதனால் அந்நபட்டு மக்கள் உட்பட பல நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறித்த போரில் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 604ஆக அதிகரித்து விட்டதாக ஐ.நா சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.
தற்போது சவுதியில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், உள்நாட்டு போரால் சுமார் 7 லட்சம் மக்கள் நகர்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளதும் தெரியவந்துள்ளது.