Home உலகம் பாகிஸ்தான் நாட்டு முன்னால் பிரதமர் கைது – சமூக வலைத்தளங்கள் முடக்கம்

பாகிஸ்தான் நாட்டு முன்னால் பிரதமர் கைது – சமூக வலைத்தளங்கள் முடக்கம்

by Jey

பாகிஸ்தான் நாட்டு முன்னால் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.

இம்ரான் கான் ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, பாகிஸ்தான் துணை இராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் இம்ரான் கானின் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்முறை ஏற்படும் சூழலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

related posts