பிரசன்னா – சினேகா ஜோடி தனது 11வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
தனது திருமண நாளில் ‘ஹேய் பொண்டாட்டி’ என்று தொடங்கி நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11ம் திகதி நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் திருமண நாளை முன்னிட்டு நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஏய் பொண்டாட்டி இந்த சிறப்பு நாளில் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும், உன் கையை பிடித்துக் கொண்டு சென்ற நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
உன்னுடன் நான் மேற்கொண்ட இந்த பயணத்திற்கு நன்றி உடையவனாக இருப்பேன்.
உன்னை நான் எப்போதும் காதலிக்கிறேன், நம் காதல் வலுவாகவும் உயர்ந்ததாகவும் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதேவேளை, கடந்த சில தினங்களாகவே பிரசன்னா – சினேகா ஜோடி விவாகரத்து பெற்று பிரிய போவதாக தகவல் வெளிவந்திருந்த நிலையில், அனைத்து சர்ச்சைகளுக்கும் இன்று நடிகர் பிரசன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.