எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச துறைமுகங்கள் இரண்டால் நிராகரிக்கப்பட்ட கப்பல் எப்படி இலங்கை கடலுக்கு வந்தது? இதற்கு அனுமதி வழங்கிய தேசத் துரோகி யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் கடல் வளத்திற்கும், கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் 2021 மே மாதத்தில் நடந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன்னர் நியூ டயமன்ட் கப்பல் விபத்தால் பேரழிவு ஏற்பட்டது.
இது 2020 செப்டம்பரில் நடந்தது. உலகில் பல நாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பசுமை சுற்றாடல் என்பன முறையாக பேணப்படுகின்றது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.