மார்பகப் புற்று நோய் குறித்து முன்கூட்டிய பரிசோதனைகள் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைகன் 40 வயதில் மேற்கொள்ளப்பட வேண்டுமென வைத்தியர்கள் கோரியுள்ளனர்.
மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களும் இந்த விடயம் குறித்து கோரியுள்ளனர்.
மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையை 40 வயதில் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்காவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையை கனடாவிற்கும் பொருந்தும் எனவும், இந்த நடைமுறையை கனடாவிலும் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவிலும், அமெரிக்காவிலும் தற்பொழுது 50 வயதை அடைந்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.