யாப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(11) உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார் என தெரிவிக்கப்படுகிற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.