நைஜீரியாவில் வடமேற்கு மாநிலமான சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றுள்ளனர்.
அந்த படகு எதிர்பாரத விதத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில்
பயணம் செய்த 15 குழந்தைகள் வரை பலியானதுடன் மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் சிறுவர் குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த படகு ஆற்றின் நடுவே சென்றுக்கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 13 சிறுமிகள், 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பெருமளவிலானோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
மீட்பு பணியாளர்கள் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.