ஆந்திராவின் சில பகுதிகளில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் சென்னையில் இருந்து கார்கள் மூலமாக ரசீது இல்லாமல் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.பரமேஸ்வர ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் சூளூர்பேட்டை போலீசார் சென்னையில் இருந்து நெல்லூர் செல்லும் வழியில் உள்ள சூளூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த 2 கார்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது அவற்றில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.