Home Uncategorized கனடாவில் வீட்டு வாடகைத் தொகை உயர்வு

கனடாவில் வீட்டு வாடகைத் தொகை உயர்வு

by Jey

கனடாவில் வாடகைக்கு குடியிருப்புகளுக்கான கேள்வி அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக வாடகை குடியிருப்புகளுக்கான கேள்வி நிரம்பலை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதான நகரங்களில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய ரீதியில் வாடகை வீட்டு வெற்றிடங்கள் இரண்டு வீதம் அளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் வாடகை தொகை மிகவும் அதிகமான நகரமாக வாங்கூவார் நகரம் காணப்படுகின்றது.

ஒரு படுக்கை அறையைக் கொண்ட குடியிருப்பு ஒன்றின் மாதாந்த சராசரி வாடகைத் தொகை 2500 முதல் 3800 டாலர்கள் வரையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

related posts