Home உலகம் பதற்ற நிலையிலேயே பாகிஸ்தான்

பதற்ற நிலையிலேயே பாகிஸ்தான்

by Jey

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளமையினால் அங்கு கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்காரணமாக போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இராணுவத்தை அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தபட்சம் மூன்று கட்சித் தலைவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய நகரங்களில் துணை இராணுவப் படைகள் தெருக்களில் அணு ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பதற்றம் அதிகமாக இருந்தது.

இதன்போது, போராட்டக்கார்கள் மீது கண்ணீர் புகை மற்றம் நீர்தாரை பிரயோகம் என்பன பிரயோகிக்கப்பட்டன.

இதனால் பாகிஸ்தானில் தொலைபேசி சேவைகள் மற்றம் இணைய சேவைகள் என்பன இடைநிறுத்தப்பட்டு, பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் இரண்டில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

related posts