நடப்பு ஐபிஎல் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
போட்டி முடிந்த பின்னர் தோனி மைதானத்திற்குள் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பெவிலியனில் இருந்து ஓடி வந்த தோனியின் மகள் ஜிவா, தந்தையை அன்போடு கட்டி அணைத்து கொண்டார்.
இது தொடர்பான க்யூட்டான வீடியோ வைரலாகியுள்ளது.