பொலிஸ் உத்தியோகத்தர் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் டுடே கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஒட்டாவாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம் பெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருடன் இணைந்து இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளின் உயிரை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வீடு ஒன்றில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை தடுக்க சென்ற போலீசார் மீது வீட்டில் இருந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.