கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி, 43.2 வீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்று தந்து வெற்றியை பதிவு செய்துள்ளது.
மிக நீண்ட காலத்திற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் குறித்த தேர்தல் கடந்த 10 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
அதன்படி, கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியிருந்தன.
918 சுயேட்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் மேலும் வாக்கு எண்ணிக்கை மே 13 திகதி முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.