Home இலங்கை பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியாகவே இந்த புத்தர் சிலை

பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியாகவே இந்த புத்தர் சிலை

by Jey

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா புத்தரின் சிலைகளை ஆயுதமாக கொண்டு தொல்பொருள் திணைக்கள அனுசரணையோடு நடத்தப்படும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியே திருகோணமலை மண்ணில் புத்தர் சிலை பிரதிஷ்டை குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலை நகரில் கடற்கரை வீதியில், விளையாட்டு அரங்கிற்கு முன்னால் காணப்படும் நான்கு அரச மரங்கள் அமைத்திருக்கும் இடத்தில் புத்த பெருமானின் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற உள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நான்கு அடி உயரமான புத்தர் சிலையுடன் இலங்கைக்கு வந்துள்ள 50 பௌத்த பிக்குகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்து வந்திருக்கும் திருகோணமலை மண்ணில் இந்த புத்தர் சிலை நாட்டப்படுவதற்கு போலியான காரணங்கள் வரலாற்றை திரிபுப்படுத்தி முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக புத்தரின் சிலைகளை ஆயுதமாக பயன்படுத்தி தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையோடு தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியாகவே இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை நிகழ்த்தப்பட உள்ளது.

related posts