கனடாவில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக பணவீக்கம் குறைவடைந்து செல்கின்றது, கடந்த ஏப்ரல் மாதத்திலும் பணவீக்க வீதம் குறைந்த அளவிலே காணப்பட்டது.
எனினும் கனடாவில் சம்பளங்கள் வேகமாக வளர்ச்சியடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் பணவீக்கத்தை 2 வீதம் என்ற அளவில் குறiவாக பேணும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
எனினும், இந்த முயற்சிக்கு சம்பள அதிகரிப்பு முட்டுக்கட்டையாகலாம் என சுடு;டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார அழுத்தங்கள் குறைதல் மற்றும் வட்டி வீத அதிகரிப்பு போன்ற காரணிகளினால் பணவீக்கம் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது.