விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி உதவித்தொகை அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) வழங்கப்படுகிறது.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின்படி அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரையும், வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையும் என 3 வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.