நெருங்குகிறது மே 18! நினைவிருக்கிறதா 14 ஆண்டுகளுக்கு முன்பு பசுமையான முள்ளிவாய்க்கால் மண்ணானது மக்களின் இரத்தத்தில் தோய்ந்த காட்சிகள்?
ஆயிரக்கணக்கானோரின் உடல்களில் இருந்து உயிர்களை பிரித்து, இரத்தத்தை பிழிந்து நரவேட்டையாடிய 30 வருடகால போரின் இறுதி நாட்கள் மிகவும் கோரமானவை.
விண்ணைப் பிளக்கும் குண்டுத்தாக்குதல்களின் சத்தங்களும், காதை கிழிக்கும் மரண ஓலங்களும் எத்தனையெத்தனை ஆண்டுகளானாலும் முள்ளிவாய்க்கால் காற்றில் கலந்தே இருக்கும்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியானது குறிப்பிட்டு சொல்லக்கூடிய முக்கிய இடத்தை பிடிக்கிறது.
மிகவும் கொடூரமாக முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
வட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்.