செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வள்ளிபுரம் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைபாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இதனால் வாகன ஒட்டிகள் அச்சத்துடனேயே நீண்டகாலமாக பயணித்து வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழை காரணமாக இந்த தரைபாலத்தின் ஒரு பகுதி உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மதுராந்தகம்-திருக்கழுக்குன்றம் சாலை துண்டிக்கப்பட்டது.
அந்த பாலம் சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதால் பாலாற்றின் தரை பகுதியில் தற்காலிகமாக மணல் கொட்டி சாலை அமைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டு பாலம் சிரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிக மணல் சாலை மூழ்கி சாலைக்கு மேலே தண்ணீர் சென்றதால் தற்காலிக சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.