Home இந்தியா 32 ஆயிரம் பெண்கள் குறித்து ’தி கேரளா ஸ்டோரி’

32 ஆயிரம் பெண்கள் குறித்து ’தி கேரளா ஸ்டோரி’

by Jey

குஜராத் மாநிலத்தின் 40 ஆயிரத்துக்கும் மேலான பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதான தகவல் நாட்டை உலுக்கி வருகிறது.

கேரள மாநிலத்தின் 32 ஆயிரம் பெண்கள் குறித்து ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் எழுப்பிய சர்ச்சைகளுக்கு மத்தியில், குஜராத்தின் 40 ஆயிரம் பெண்கள் குறித்தான ஆதாரபூர்வ கேள்விகளும் கிளம்பின.

இந்த பரிதவிப்புடன், பாஜக கட்டமைத்திருக்கும் ’குஜராத் மாடல்’ மீதும், அரசு தரப்பிலான தரவுகளே கல்லெறிந்திருக்கின்றன.

’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டீஸர் வெளியானபோது நாட்டில் பெரும் பதற்றம் எழுந்தது.

’கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து பெண்கள், ’லவ் ஜிஹாத்’ மூலம் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அதிகம் செயல்படும் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுகிறார்கள்’ என்பதே ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் கதை.

’எந்த தரவுகளின் அடிப்படையில் 32 ஆயிரம் கேரள பெண்கள், மதம் மாற்றப்பட்டு, நாடு கடத்தலுக்கு ஆளாவதாக இந்த திரைப்படம் சித்தரிக்கிறது’ என்ற கேள்வியை படக்குழு புறக்கணித்தது.

ஆனால், அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் நீதிமன்றங்களை நாடியதும் படக்குழு சுதாரித்தது. 32 ஆயிரம் பெண்கள் என்ற எண்ணிக்கையை, 3 பெண்களாக சுருக்கி விளம்பரங்களைத் திருத்தினர்.

இந்த இடத்திலேயே ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மீதான நம்பகத் தன்மை அடிவாங்கியது.

related posts