Home கனடா பாடசாலை நிகழ்வுகளில் பெற்றோர் சீருடையுடன் பங்கேற்க அனுமதி

பாடசாலை நிகழ்வுகளில் பெற்றோர் சீருடையுடன் பங்கேற்க அனுமதி

by Jey

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலை நிகழ்வுகளில் பெற்றோர் சீருடையுடன் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளது.

மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீவன் லீஸ் எழுத்து மூலம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

பாடசாலை சபைகளுக்கு இந்த உத்தரவு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர், போன்ற சீருடைப் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தங்களது பிள்ளைகளின் பாடசாலை வைபவங்களில் சீருடையுடனேயே பங்குபற்ற அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஒட்டாவா பாடசாலையொன்றில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சீருடையுடன் பள்ளி நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படாத சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

related posts