கனடாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
இரு தரப்புக்களுக்கும் இடையில் வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுது;தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, தென்கொரியாவிற்கு விஜயம் செய்யும் நிலையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
கனிம வளம் உட்பட்ட சில துறைகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவிற்கான தென் கொரிய தூதுவர் லிம் வூங்சூன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.