Home இந்தியா தமிழக அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

தமிழக அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

by Jey

மதுபான கடைகளின் மூலம் ஆண்டிற்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் 500 மதுபான கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய, 500 மதுபான கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் திகதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

related posts