இன்று காலை பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிறிஸ்தவ பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத நல்லிணக்கத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட கிறிஸ்தவ மதப் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, போதகர் ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், ஜெரோம் நாட்டை விட்டு வெளியேறினார் என்பதை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.