ஜோர்மனில் இருக்கும் கயில்புறோன் கந்தசாமி ஆலயத்தின் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் இவ் ஆலயத்தில் தமிழ் முறைப்படி பூசைகள் நடாத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட சில தினங்களில் செந்தமிழ் குடமுழுக்கு நடைபெற இருந்த நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமஸ்கிருதத்திலேயே பூசை இடம்பெறவேண்டும் என்றும்இ நீஷபாஷயான தமிழில் கடவுளுக்கு வழிபாடு இருக்கக்கூடாது என்று செயற்படுவோரின் வேலைதான் இது என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.
குறித்த தாக்குதல்கள் அவர்களின் தூண்டுதலின் பெயரிலேயே நடாத்தப்பட்டிருக்கலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றார்கள்.