கனடாவில் பிணை வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிணை நிபந்தனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென மத்திய அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் எளிதில் பிணையில் விடுதலையாவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்கான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பில் சீ-48 இந்த சட்டத்தினை அறிமுகம் செய்வதன் மூலம் பாரதூரமான குற்றச் செயல்களை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.