மொசாம்பிக் எல்லைக்கு அருகில் தெற்கு மலாவியின் தொலைதூர நசன்ஜே மாவட்டத்தில் நீர்யானை மோதியதில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது
மலாவியில் படகு ஒன்றுடன் நீர்யானை மோதியதில் ஒரு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் மலாவியில் பதிவாகியுள்ளது. மலாவியின் மிகப்பெரிய ஆற்றில் நீர்யானை ஒன்று படகில் மோதியுள்ளது.
மீட்புக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றன.இந்த சம்பவம் திங்கட்கிழமை நடந்துள்ளதுடன், யாராவது உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் ஷைர் ஆற்றைக்கடந்து வயல் வேலைக்குச் செல்ல கிராம மக்கள் படகில் நிரம்பியிருந்தனர். இதன்போது நீர்யானை படகைத் தாக்கியது.
மொத்தம் 14 பேர் காப்பாற்றப்பட்டனர். ஆனால் படகில் இருந்த ஒரு குழந்தையை மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்துள்ளது.
“விபத்து தொடர்பில் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.