Home இலங்கை ஆளுநர்களை பதவி நீக்கியதற்கு இரகசியப் பேச்சுவார்த்தையா காரணம்…?

ஆளுநர்களை பதவி நீக்கியதற்கு இரகசியப் பேச்சுவார்த்தையா காரணம்…?

by Jey

நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் மாத்திரம் திடீரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை காரணமென நாட்டு மக்கள் சந்தேகப்படுவதாக, கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் திருட்டுத்தனமாக இரகசியமானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில், மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை மாத்திரம் ஜனாதிபதி பதவி நீக்கியுள்ளார்.

ஆளுநர்களை பதவி நீக்கியதற்கு கூட்டமைப்புடனான இரகசியப் பேச்சுவார்த்தையா காரணமென, நாட்டு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

நாட்டில் ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இருந்தும் ஏன் மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை மாத்திரம் ஜனாதிபதி பதவி நீக்கினார் என்பதற்கான காரணத்தை, ஜனாதிபதி ரணில் அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

 

 

 

 

related posts