கனடாவில் அல்பர்டா பகுதியில் தொடர்சியாக எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
அல்பர்டாவில் இந்த ஒரே மாதத்தில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதோடு தீயணைப்பு பணியில் அந்நாட்டு ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எட்மான்டனில் நேரில் ஆய்வு செய்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தீயணைப்பு பணிக்காக கூடுதல் ராணுவத்தினர் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.