கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு அவர் தொழில் செய்யும் இடத்தில் கடமையாற்றும் ஏனைய பணியாளர்கள் உதவி செய்திருக்கும் விதம் வைரலாகி வருகின்றது.
கர்ப்பிணியாக இருக்கும் லிசா ஆம்ஸ்ட்ரோங் வான்கூவார் தீவுகளில் உணவு விடுதி ஒன்றில் ஒன்றில் கடமையாற்றி வருகின்றார்.
குறித்த பெண் அதிகமான குடும்ப சுமை மற்றும் குடும்ப வறுமை காரணமாக மகப்பேற்றுக் காலத்தில் கூடுதல் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.
ஆகவே, அந்த பெண்ணுக்கு 15 முதல் 17 வயதான பணியாளர்கள் தங்களது சம்பளத்தை நன்கொடையாக வழங்கி லீசாவிற்கு உதவியுள்ளனர்.
மகப்பேற்றின் பின்னர் இரண்டு வாரங்களில் பணிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தார். எனினும், குழந்தை இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்த காரணத்தினால் குழந்தையை மருத்துவமனையில் வைத்து பராமரிக்க நேரிட்டது.
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய லீசாவிற்கு, அவரது சக பணியாளர்கள் தங்களது சம்பளத்தை திரட்டி கொடுத்துள்ளனர். இதன் மூலம் தம்மால் அதிக எண்ணிக்கையிலான நாட்கள் விடுமுறையில் இருக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.