தமிழ்நாட்டில் அரசு மதுபான விற்பனைக் கடைகளை படிப்படியாகக் குறைத்து, முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும் என்று மதிமு பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கடந்த 13ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த எட்டு பேர் உயிரிழந்தனர்.