Home உலகம் சின்குவா பகுதியில் தங்கசுரங்கம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு

சின்குவா பகுதியில் தங்கசுரங்கம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு

by Jey

கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் அதேவேளையில் உள்ளூர் மக்கள் சிலர் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள். இதுபோன்ற சட்டவிரோத தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வது தொடர்கதையாக உள்ளது.

இந்தநிலையில் கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

related posts