ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள், 2017ல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இது நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு. 2017ல் திருத்தம் செய்தது. அந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள