கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளார். ஜி 7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் ட்ரூடோ ஜப்பானின் ஹிரோஷிமா நகரை சென்றடைந்தார் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் குழப்ப நிலைமையில் நிலவிவரும் பின்னணியில் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனாவினால் பிரயோகிக்கப்படும் அச்சுறுத்தல்கள் ரஷ்ய உக்ரைன் போர் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் விஜயத்துக்கு முன்னதாக பிரதமர் ட்ரூடோ தென்கொரியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.