மிஸ்ஸாகவா மற்றும் பிரம்டன் ஆகிய பகுதிகள் சுயாதீனமான நகரங்களாக அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் குறித்த இரண்டு பகுதிகளும் பீல் பிராந்தியத்தின் ஓர் அங்கமாக காணப்பட்டது.
எனினும் இரண்டு பகுதிகளையும் தனி நகரங்களாக அறி விப்பதற்கு மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பீல் பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் 1.4 மில்லியன் மக்களின் 8 லட்சம் மக்கள் மிஸ்ஸஸாகாவில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே அந்தப் பகுதியை தனி நகரமாக மாற்றுவது பொருத்தமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறு எனினும் பீல் பிராந்தியத்தின் கீழ் காணப்படும் கால்டொன் நகர் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இந்த நகரம் தனி நகரமாக அறிவிக்கப்படுமா? இல்லையா என்பது பற்றி தகவல்கள் வெளியிடப்படவில்லை.