Home இலங்கை யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

by Jey

யுத்தத்தால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சமாதான புறாக்களும் பறக்க விடப்பட்டுள்ளன.

வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று (18.05.2023) மாலை 5.30 மணிக்கு வன்னி மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டு கொடிய யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

கொடிய யுத்தத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பலர் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி பௌத்த பிக்குகள், இந்து மதகுருமார், கத்தோலிக்க மதகுருமார், இஸ்லாமிய மதகுரு ஆகியோரின் ஆசிகளுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பிரதான சுடரினை மதத் தலைவர்களும், அதிதிகளும் ஒன்றிணைந்து ஏற்றி வைக்க, ஏனைய சுடர்களை பொதுமக்கள் ஏற்றி வைத்ததுடன், இறந்தவர்கள் நினைவாக தென்னம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் வலியுறுத்தி மதத்தலைவர்களால் புறாக்களும் பறக்கவிடப்பட்டுள்ளன.

related posts