Home கனடா கனடாவில் துப்பாக்கி கட்டுப்பாடடுச் சட்டம் நிறைவேற்றம்

கனடாவில் துப்பாக்கி கட்டுப்பாடடுச் சட்டம் நிறைவேற்றம்

by Jey

கனடாவில் துப்பாக்கி கட்டுப்பாடு குறித்த உத்தேச சட்டமூலம் அந்நாட்டு கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பில் சி 21 எனப்படும் இந்த சட்டத்தை ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தது.

இந்த உத்தேச சட்ட மூலத்திற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இரண்டு லிபரல் கட்சி உறுப்பினர்களும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களும் சட்டம் மூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஒரு ஆண்டுக்கு முன்னதாக இந்த சட்டம் லிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி உரிமையாளர்கள் தமக்கும் ஏனையவர்களுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தாத வகையிலும் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்கள் விற்பனை செய்வதனை தடுக்கும் வகையிலும் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில வகை ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் குறித்த துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டமானது நாட்டில் வாழ்ந்து வரும் பழங்குடியின சமூகத்தை பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts