இந்தியாவில் முதியவர் ஒருவரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள தேநீர் கடையில் 76 வயது முதியவர் தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் உடனடியாக எழுந்து அந்த செல்போனை எடுத்து கீழே போட்டார்.
துரிதமாக செயல்பட்டு தீயை தட்டி விட்டதால் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்
இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.